உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளிலும் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக விமான எரிபொருளின் தேவையும் கணிசமாக குறைந்தது. அதன்படி, டெல்லியில் கடந்த மே மாதம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 22,544.75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதேபோல, உலகின் பல்வேறு நாடுகளிலும் விமான சேவை என்பது படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
அதன்படி, டெல்லியில் விமான எரிபொருள்களின் விலை ஒரே மாத்தில் மூன்றாவது முறையாக தற்போது உயர்த்துப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.2,922.94 (1.48 விழுக்காடு) உயர்த்தப்பட்டு 41,992.81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.