தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அசோக் லேலண்ட் வாகன விற்பனை உயர்வு! - கார் விற்பனை

சென்னை: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் 5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

leyland
leyland

By

Published : Dec 1, 2020, 8:04 PM IST

Updated : Dec 1, 2020, 9:36 PM IST

அசோக் லேலண்ட் நிறுவனம் நவம்பர் மாதத்தில் மட்டும் 4,238 டிரக்குகளை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவிகிதம் அதிகமாகும்.

உள்நாட்டில், அந்நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான பேருந்து விற்பனை, நவம்பர் மாதத்தில் 184 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,874 பேருந்துகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இது 90 சதவிகித சரிவாகும். ஒட்டுமொத்தமாக அந்நிறுவனம் 4,442 கன மற்றும் நடுத்தர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதேபோல், இலகு ரக வாகன விற்பனை 5,305 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை சேர்த்து நவம்பர் மாத்தில் 10,659 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 5 சதவிகிதம் அதிகமாகும்.

கரோனா பாதிப்பு காரணமாக கன ரக வாகன விற்பனை சரிவடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: சரியும் டீசல் விற்பனை, உயரும் பெட்ரோல் விற்பனை!

Last Updated : Dec 1, 2020, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details