கரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக டெக் உலகம் முழுவதுமாக முடங்கியுள்ளது. பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை வெளியிடாமல் தள்ளிவைத்துள்ளன. இருப்பினும், கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் துணிச்சலாக புதிய ஐபோன் மாடலை வெளியிட்டது.
மே மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப்? - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப்பான மேக்புக் ப்ரோவை மே மாதம் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய லேப்டாப்பான மேக்புக் ப்ரோவை மே மாதம் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில், "மார்ச் மாதம் வெளியாக இருந்த மேக்புக் ப்ரோ தற்போது வெளியாக தயாராக இருப்பதாகவும் மே மாதம் புதிய மேக்புக் வெளியாகும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், AirPods Pro என்ற புதிய இயர்போனும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.