தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆப்பிள் நிறுவனத்தை பாதிக்கும் கரோனா? - Corona virus will affect business

பெய்ஜிங்: ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஐபோன், மேக்புக், ஐபாட் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் சீன நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

apple business affected by corona virus
apple business affected by corona virus

By

Published : Jan 29, 2020, 8:01 PM IST

Updated : Mar 17, 2020, 5:07 PM IST

பணக்கார நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை சரியான அமைப்பில் இணைக்கப்பட்டு முழுவடிவம் பெற்று விற்பனைக்கு செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைநகரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரம் என்றாலும், 90 சதவிகித உற்பத்தி சீனாவில் தான் நடைபெறுகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் 10,000 சீன ஊழியர்களை பணியிலும் அமர்த்தியுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ், சீன நாட்டை வாட்டியெடுக்கும் சூழலில், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலன் குறித்து ஆப்பிள் நிறுவனம் கவலைகொண்டுள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான வணிகங்களான ஐக்ளவுட் தரவு மையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பெரிய உற்பத்தித் தளம் சீனாவில் தான் அமைத்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை தடைபெறுமா என்ற கேள்வி வணிக ரீதியாக எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் தாக்குதல் - தற்காத்துக் கொள்வது எப்படி?

Last Updated : Mar 17, 2020, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details