மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (Mahindra&Mahindra) குழுமத்தின் தலைவராக இருந்துவரும் ஆனந்த் மஹிந்திரா (64) பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் குடும்பத்தால் இந்நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் (Harvard Business School) எம்பிஏ படிப்பை முடித்தஆனந்த் மஹிந்திராஇந்நிறுவனத்தில் இணைந்தார் .
இதுவரை மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த ஆனந்த் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகி நிர்வாகக் குழுவின் கௌரவத் தலைவராகச் (Non executive chairman) செயல்படுவார் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த 15 மாதங்களில் நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்றும் முக்கியப் பொறுப்புகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையை ஒழுங்குமுறைப்படுத்தும் செபியின் அறிவுறுத்தலின்படி, தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: எல்ஜியின் புதிய டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட் போன் லான்ச்!