கோவிட்-19 தாக்கம் சர்வதேச அரங்கிற்கு பெரும் பின்னடைவைத் தந்தாலும், ஆன்லைன் விற்பனை இந்தாண்டு சிறப்பான உயர்வைக் கண்டது. இதுதொடர்பாக உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், சுதந்திர சந்தை விற்பனையானது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சிறப்பான உயர்வை கண்டுள்ளது. சிறுகுறு வணிகர்கள் பலன் பெறும் வகையில், பல்வேறு சந்தைத் திட்டங்களை அமேசான் முன்னெடுத்தது. அதன் விளைவாக, மூன்றாம் நபர் விற்பனை கடந்தாண்டை காட்டிலும் 50 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.