உலகின் மிகப் பெரிய மின் வணிகமாக அமேசான், தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்கிறது. இந்தியாவின் அதன் வளர்ச்சியை நிரூபிக்கும் வகையில் ஐதராபாத்தில் அதன் புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் அலுவலகம் கொண்ட அமேசான், முதல் முறையாக இந்தியாவில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாவில் மட்டும் தான் அமேசானுக்கு அலுவலம் உள்ளது.
9.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ஈபிள் டவர்யை விட இரண்டரை மடங்கு இரும்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 15 ஆயிரம் ஊழியர்கள் உள்ளதாகவும், இன்றைய தினம் மட்டும் 4500 ஊழியர்கள் இந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.