நாளுக்கு நாள் இணைய வணிகம் அதிகரித்துவருகிறது. இதையடுத்து, இணையத்தில் வணிகம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலை டிஆர்ஏ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், அமேசான் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கூகுளும் பேஸ்புக்கும் இடம்பிடித்துள்ளது.
நான்காவது இடத்தில் சொமேட்டோவும், ஐந்து, ஆறு ஆகிய இடங்களை கூகுள் பிளே ஸ்டோர், ஓலா ஆகியவை பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை ஜீ5 (ZEE5) பிடித்து முதல்முறையாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. டிஆர்ஏ அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், 16 இந்தியாவைச் சேர்ந்ததாகும், 12 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்ததாகும், இரண்டு சீனாவைச் சேர்ந்ததாகும்.