தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தீபாவளி சிறப்பு விற்பனை 21ஆம் தேதி முதல் தொடக்கம் - அமேசான் அறிவிப்பு - Amazon special offer

பெங்களூரு: தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதியை அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Amazon Diwali Special sale

By

Published : Oct 19, 2019, 2:22 PM IST

அமேசான் இந்தியா நிறுவனம் Great Indian Festival சிறப்பு விற்பனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகளை வழங்கவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினி, கேமரா, சமையலறை பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 இரவு 11.59 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம உறுப்பினர்கள் (Prime members) அக்டோபர் 20ஆம் தேதி காலை 12 மணி முதல் பெறலாம்.

விற்பனையின் போது ​​பயனர்கள் ஆப்பிள், சியோமி, ஒன்பிளஸ், சாம்சங், விவோ, ஹானர் போன்ற பிராண்டுகளின் பொருட்களை பெற முடியும். ஒன்ப்ளஸ் 7 T , சாம்சங் M 30 மற்றும் விவோ U 10 உள்ளிட்ட சமீபத்திய அமேசான் ஸ்பெஷல்ஸ் ஸ்மார்ட்போன்களில் பல சலுகைகளை பெற முடியும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உபகரணங்கள் மற்றும் டிவி-க்கு விலை இல்லாத ஈஎம்ஐ (No-cost EMI), பரிமாற்ற சலுகைகள் (Exchange offers) மற்றும் இலவச விநியோகங்களுடன் நிறுவுதல் (installation with free deliveries) ஆகியவற்றிற்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பஜாஜ் ஃபின்சர்வ் (Finserv) கார்டுகள், அமேசான் பே (Amazon Pay) மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டில் வரம்பற்ற வெகுமதி புள்ளிகளில் (unlimited reward points) நுகர்வோர் விலை இல்லாத EMI (No-cost EMI) இலிருந்து பலவிதமான நிதி விருப்பங்களையும் பெறலாம்.

கூடுதலாக, எல்ஜி (43) 4 K ஸ்மார்ட் டிவி, வேர்ல்பூல் கன்வெர்டபிள் டபுள் டோர் குளிர்சாதன பெட்டி, சாம்சங் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சான்யோ கைசன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மற்றும் பல சலுகைகள் இடம்பெறவுள்ளது. இந்த அறிவிப்பு தீபாவளியை எதிர்நோக்கியிருக்கும் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 'எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு பணம் வேணுமா...!' - பெண்ணின் விநோத செயலால் விமான நிலையத்தில் சிரிப்பலை!

ABOUT THE AUTHOR

...view details