தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை! - கூகுள் தலைவர் சம்பளம்

வாஷிங்டன்: ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் வழங்குவது தெரியவந்துள்ளது.

Sundar Pichai
Sundar Pichai

By

Published : Apr 26, 2020, 10:22 AM IST

தமிழ்நாட்டில் பிறந்து தற்போது கூகுள், ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் 47 வயதான சுந்தர் பிச்சை. 2019ஆம் ஆண்டு இவருக்கு ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 2,136 கோடி) வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை உள்ளார்.

ஆண்டுதோறும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஊதிய பட்டியல் தொடர்பான தகவல்களை அமெரிக்க அரசுக்கு தாக்கல்செய்வது வழக்கம். அவ்வாறு 2019ஆம் ஆண்டிற்கான தகவல்களை ஆல்பாபெட் நிறுவனம் தாக்கல் செய்தபோதுதான் சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் பிச்சை 2015ஆம் ஆண்டு முதன்முதலில் கூகுள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அடிப்படை ஊதியமாக 6,50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் அவர் ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் அவரது அடிப்படைச் சம்பளம் 6,50,000 அமெரிக்க டாலர்களிலிருந்து இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. அத்துடன் சேர்த்து ஊக்கத்தொகையாக அவருக்கு ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளும் வழங்கப்பட்டன.

இவை அனைத்தின் மதிப்பும் சேர்ந்துதான் 2019ஆம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு ஆண்டுச் சம்பளமாக 280 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. சர்வதேச அளவிலுள்ள பெரும்பாலான நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர்களின் ஊதியம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் 280 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் 6.43% பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி வங்கி

ABOUT THE AUTHOR

...view details