ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையையும் கரோனா பெருந்தொற்று கடந்த சில மாதங்களாக புரட்டிபோட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக வரும் பண்டிகைகள் புதிய தெம்பையும் உற்சாகத்தையும் வழங்குகின்றன.
மக்களும் தசாரா, தீபாவளி, தன்தேராஸ் என கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகின்றனர். வாடிக்கையாளர்களை வரவேற்க தங்கம், வெள்ளிக் கடைகளும் தயாராகிவிட்டன. ஆனாலும் உண்மையான பிரச்னை ஒன்று உள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தங்கத்தின் சில்லறை வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக பொதுமக்கள் கடந்த கால கசப்புணர்வுகளை பண்டிகை காலத்தில் மறந்துவிடுவார்கள். இதுவே அவர்கள் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொள்ள உதவுகிறது.
இதே நம்பிக்கையில் கடை உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர்.
மினுமினுக்க தொடங்கும் தீபாவளி! தங்க விலையும் தாறுமாறாக எகிறியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் செலவை குறைக்கும் விதமாக பார்த்து பார்த்து கவனமாக தங்கம் வாங்குகின்றனர். விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் வாடிக்கையாளர்களும் பொருத்தமான விலையுள்ள நகைகளை தேடுகின்றனர்.
இதையெல்லாம் மனதில் வைத்து பண்டிகைக் காலத்தில் செலவினங்களை அணுகி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்.