தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சிங்கிள்ஸ்-டே ஸ்பெஷல்: 32 பில்லியன்களுக்கு மேல் வர்த்தகம் செய்து அலிபாபா சாதனை! - 32 பில்லியன்களுக்கு மேல் வர்த்தகம் செய்த அலிபாபா

சீனா: அலிபாபா நிறுவனம் சிங்கிள்ஸ்-டே சிறப்பு விற்பனையில் 32 பில்லியன்களுக்கு மேல் வர்த்தகம் செய்து சாதனை படைத்துள்ளது.

alibaba sales

By

Published : Nov 11, 2019, 10:02 PM IST

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனம் 1999ஆம் ஆண்டு ஜாக் மா என்பவரால்தொடங்கப்பட்டது. ஆன்லைன் வணிக நிறுவனமான அலிபாபா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படும் சிங்கிள்ஸ்-டேவில் சிறப்பு விற்பனையை தொடங்கும். அதன்படி, இன்று தொடங்கிய சிங்கிள்ஸ்-டே சிறப்பு விற்பனையில் இதுவரை 32 பில்லியன்களுக்கு மேல் வர்த்தகம் செய்து அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

மேலும்சிங்கிள்ஸ்-டே சிறப்பு விற்பனை தொடங்கிய68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட வர்த்தகம், கடந்த ஆண்டை விட 25 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 24 மணி நேர வர்த்தக முடிவிற்குள் 30 முதல் 40 விழுக்காடு விற்பனையில் உயர்வு ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் சோதனையில் உள்ளது' - நிர்மலா சீதாராமன் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details