தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

குழந்தைகளை கவர ஏர்டெல் எடுத்துள்ள அதிரடி முடிவு - ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்

ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீமில் குழந்தைகளுக்கான வீடியோக்களை இலவசமாக காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

airtel
airtel

By

Published : Apr 14, 2020, 4:39 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றால் உலகெங்கும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இணைய பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் தாங்கள் விரும்பிய வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கான வீடியோக்கள் அனைத்தும் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீமில் இலவசமாக காணலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாங்கள் எங்கள் எக்ஸ் ஸ்ட்ரீம் தளத்தில் குழந்தைகளுக்கு என தனியாக ஒரு சேனலை தொடங்குகிறோம்.

இதை அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இலவசமாக காணலாம். இந்த நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு இது சிறிது ஆறுதலாக அமையும் என்று நம்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:ஊரடங்கால் பிளிப்கார்ட் எடுத்துள்ள முக்கிய முடிவு!

ABOUT THE AUTHOR

...view details