தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏஜிஆர் தொகை கணக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறை குளறுபடி: நீதிமன்றத்தில் ஏர்டெல் குற்றச்சாட்டு - திருத்தப்பட்ட மொத்த வருவாய் ஏர்டெல் மனு

தாங்கள் செலுத்த வேண்டிய ஏ.ஜி.ஆர். தொகையை தொலைத்தொடர்பு அமைச்சகம் கூடுதலாக கணக்கிட்டு உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளது.

ஏர்டெல்
Airtel

By

Published : Jan 6, 2021, 7:56 PM IST

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை முறையாகச் செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், வோடாபோன், ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் தொகையை உரிய தவணைகளில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட, நிறுவனங்கள் தங்கள் வருவாயின் பகுதியான "திருத்தப்பட்ட மொத்த வருவாய்" எனப்படும் ஏ.ஜி.ஆர். (adjusted gross revenue) தொகையை தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும். அதன்படி, ஏர்டெல் நிறுவனம் ரூ.43,980 கோடி செலுத்த வேண்டும் எனவும், அதில் ரூ.25,976 கோடி நிலுவையில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை கணக்கிட்ட தொகை தவறாக கூடுதலாக உள்ளது எனவும், தங்களின் கணக்குப்படி, ரூ.13,004 கோடிதான் நிலுவைத் தொகை எனக் கூறியுள்ளது.

இதையும் படிங்க:மார்ச் 1 முதல் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடக்கம்: தொலைத்தொடர்புத் துறை

ABOUT THE AUTHOR

...view details