தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு - உள்நாட்டு விமானப் போக்குவரத்து

தற்போது 70 விழுக்காடு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை நடைபெற்றுவரும் நிலையில் அதை 80 விழுக்காடாக உயர்த்தி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Airlines
Airlines

By

Published : Dec 3, 2020, 9:32 PM IST

கோவிட்-19 பாதிப்பு பரலலை அடுத்து கடந்த மார்ச் 25ஆம் தேதி உள்நாட்டு, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுகின்றனர்.

அதேவேளை, கடந்த மே 25ஆம் தேதி 33 விழுக்காடு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதித்தது. இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தில் 45 விழுக்காடாகவும், செப்டம்பர் 2ஆம் தேதி 60 விழுக்காடாகவும், நவம்பர் மாதம் 70 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது.

தற்போது அதை 80 விழுக்காடாக உயர்த்தி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவிட்-19 தளர்வுக்குப் பின் மே மாதம் உள்நாட்டு பயணிகள் 30 ஆயிரத்தில் இருந்த நிலையில், தற்போது 2.52 லட்ச பயணிகள் விமானப் போக்குவரத்தில் ஈடுபடுகிறார்கள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ள ரோஷினி

ABOUT THE AUTHOR

...view details