கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்தியாவில் அனைத்து விமான நிறுவனங்களும் மார்ச் இறுதி வாரத்தில் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன.
இந்தியாவில் மே இறுதி வாரத்தில் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும், ஊரடங்கு, கரோனா பரவல் போன்ற காரணங்களால் இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டன.
இதன் காரணமாக கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வும் சம்பள குறைப்பும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடும் வருவாய் இழப்பு காரணமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜூலை மாதம் விமான வருவாய் 88 விழுக்காடு வரை குறைந்துள்ளது. செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுவருகின்றன.