தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தேசிய அளவில் ட்ரண்டாகி வரும் ஊபர் - காரணம் உள்ளே - ஜொமெட்டோ

ஜொமெட்டோ நிறுவனத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் ஊபர்இட்ஸ்க்கு எதிராக உருவாக்கப்பட்ட ஹாஷ்டேக் தற்போது தேசியளவில் ட்ரண்டாகி வருகிறது.

ஊபர்இட்ஸ்

By

Published : Aug 2, 2019, 3:33 AM IST

சில நாட்களுக்கு முன்பு ஜொமெட்டோ நிறுவனத்தில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவர், உணவினை டெலிவரி செய்யும் நபர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது ஆர்டரை கேன்சல் செய்தார். இந்த செய்தியை அவர் ட்விட்டரில் பதிவிட்டது முதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த ஜொமெட்டோ, உண்ணும் உணவில் மதங்கள் கிடையாது, உணவே ஒரு மதம் என்று ட்வீட் செய்திருந்தது.

ஊபர்இட்ஸின் ட்வீட்

இதை ஆமோதிக்கும் வகையில், ஊபர்இட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜொமெட்டோவின் ட்வீட் செய்து, இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று ட்வீட் செய்தது. ஊபர்இட்ஸின் இந்த ட்வீடை எதிர்த்து, #BoycottUberEats என்ற ஹாஷ்டேக் தற்போது தேசியளவில் ட்விட்டரில் ட்ரண்டாகி வருகிறது.

தேசிய அளவில் ட்ரண்டான ஹாஸ்டேக்

ABOUT THE AUTHOR

...view details