உபர் நிறுவனத்தின் வருடாந்திர பகுப்பாய்வு - ‘2020 இல் ஒரு பார்வை: ஆண்டு மதிப்பாய்வு’ இந்தியாவில், மாநில / உள்ளூர் அரசுப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் இலவச வாகன சேவைகளை உபர் நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு 1,00,000 இலவச சவாரிகளை வழங்குவதற்காக, இந்திய தேசிய சுகாதார ஆணையத்துடன் (என்ஹெச்ஏ) உபர் நிறுவனம் ஒன்றிணைந்து பணியாற்றியது.
இது தொடர்பாக உபர் இந்தியா மற்றும் தெற்காசி பிரிவின் தலைவர் பிரப்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில். "கரோனா நெருக்கடி சூழலில் அரசிற்குத் துணை நின்றோம். முன்னணி சுகாதார ஊழியர்களுக்குச் சேவை செய்தல், குடிமக்களுக்கு அத்தியாவசிய பயணங்களை எளிதாக்குதல் மற்றும் முக்கிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏதுவான பணிகளை மேற்கொள்ளுதல், உலகெங்கிலும் உள்ள ஓட்டுநர்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பொருள்களை வாங்குவதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க டாலர்களை உபர் நிறுவனம் ஒதுக்கியது.
மேலும், இந்தியாவில், 30 லட்சத்திற்கும் அதிகமான முகக்கவசங்கள், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கிருமிநாசினி, சானிடைசர்களை ஓட்டுநர்களுக்கு இலவசமாக விநியோகித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, வேலையின்றி தங்களது அன்றாடத் தேவைகளுக்குப் பொருளாதார வசதியின்றி சிறமத்திற்குள்ளான உபர் நிறுவன ஊழியர்களுக்கு சுமார் 2.4 கோடி அமொரிக்க டாலர்களை உபர் நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்களின் அத்தியாவசிய பயணங்களுக்கு இந்நிறுவனம் உதவியதுடன், இந்தியாவில் உபர் எசென்ஷியலில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவைகளையும் வழங்கியுள்ளது.
உலகளவில், உபெர் 2040-க்குள் பூஜ்ஜிய-உமிழ்வுத் தளமாக மாறும் என்று உறுதியளித்துள்ளது, மேலும் இந்தியாவில், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் 3,000 மின்சார வாகனங்கள் மற்றும் மின்-ரிக்ஷாக்கள் வரை கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ள 1.48 லட்சம் கோடி ரூபாய்!