உலகெங்கும் கரோனா தொற்று காரணமாக வேலையின்மை அதிகரித்துவருகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அந்நாட்டில் வேலையின்மை 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், பியர்சன் என்ற ஆன்லைன் நிறுவனம் கரோனாவுக்கு பிந்தைய சூழல் எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர்.
உலகெங்கும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 88 விழுக்காட்டினர் ஆன்லைன் கல்வி என்பது முதன்மை, இடைநிலை, உயர் கல்வியில் நிரந்திரமாக ஒரு இடத்தைப் பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கரோனா என்பது புதுவகையான வேலைவாயப்புகளை உருவாக்கும் என்று சுமார் 88 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இருவர், கரோனாவுக்கு பின் தனது வாழக்கை பாதை(career) குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 80 விழுக்காடு இந்திய மாணவர்கள் கரோனாவுக்கு பின் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். கரோனா காரணமாக முதன்மை, இடைநிலை கல்வியில் உள்ள கற்றல் - கற்பித்தல் முறையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் என்று 74 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நமது வேலை செய்யும் முறையை கரோனா ஏற்கனவே மாற்றிவிட்டதாக சுமார் 82 விழுக்காடு இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டின் வேலைவாய்ப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் - ஆய்வு தகவல்