இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்க தொழில் துறை நிறுவனங்கள் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி அந்த ஏலம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரூ. 4.98 லட்சம் கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 526 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடப் போவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை, 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஆன்லைன் ஏலப் பணிகளில் முழு வீச்சாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.