தொலைத்தொடர்புத் துறைச்செயலர் அன்ஷூ பிரகாஷ் தலைமையில் துறைசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்ஷூ பிரகாஷ் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலத் திட்டச் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்தார்.
அதன்படி, மேம்பட்ட தொழில்நுட்பமான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஏலத்தின் மூலம் தொலைத்தொடர்புத் துறையின் நிதி, ஆரோக்கியமான நிலைமைக்குக் கொண்டுவரப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.