தமிழ்நாடு

tamil nadu

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் 37ஆவது கூட்டம்! - எதிர்பார்ப்புகள் என்ன?

By

Published : Sep 20, 2019, 10:07 AM IST

இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 37ஆவது கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GST Council meet

ஜிஎஸ்டி கவுன்சிலில் 37ஆவது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கோவாவில் நடைபெறவுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐந்து விழுக்காட்டிற்கு கீழ் சென்றது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முனைப்பில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனால் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்களும் விற்பனை வீழ்ச்சி காரணமாக வேலையில்லா நாட்களை கடைபிடித்துவருகிறது. இதனால் ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்கும் வகையில் ஜிஎஸ்டி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர பிஸ்கட், சொகுசு உணவக விடுதிகள், தீப்பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட 80 பொருட்களுக்கு இன்று ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மத்திய அரசின் திட்டங்கள் ஏற்றுமதியை ஊக்குவித்ததா?

ABOUT THE AUTHOR

...view details