உலக பொருளாதாரக் கூட்டமைப்பு என்பது, உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் தொழிற்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தன்னாட்சி அமைப்பாகும். 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களுக்கான கூட்டம் ஜோர்டான் தலைநகர் அம்மானில் நேற்றுத் தொடங்கியதுள்ளது.
இதை ஜோர்டான் நாட்டு மன்னர் ஓமர் அப்துல்லா தொடங்கிவைத்தார். இதில் ஐ.நா தலைவர் ஆன்டோனியோ குவிட்டெரஸ் பங்கேற்றுள்ளார். விழாவைத் தொடங்கி வைத்துப்பேசிய ஜோர்டான் நாட்டு மன்னர், 'எதிர்காலம் குறித்த கனவுகளுடன் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை ஜோர்டான் நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது' என கூறினார். ஐ.நா. தலைவர் ஆன்டோனியோ, 'ஜோர்டான் நாடு சிரியா, இஸ்ரேல், பாலாஸ்தீனம் போன்ற நாடுகளை ஒட்டியிருப்பதால் போர் மற்றும் சர்வதேச அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதைத்தாண்டிச் சிறப்பாகச் செயல்படும் ஜோர்டானுக்கு சர்வதேச நாடுகளில் உறுதுணை நிச்சயம் உண்டு' என்றார்.