தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா அச்சுறுத்தல்: வேலை இழக்கும் ஏர்வேஸ் ஊழியர்கள் - 12,000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்

லண்டன்: கரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

british airways
british airways

By

Published : Apr 29, 2020, 10:58 AM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. குறிப்பாக, பிரிட்டனில் 1,62,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,745 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் பல நாடுகள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. அதுமட்டுமின்றி, பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் பல நிறுவனங்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறன்றன.

இதன் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை தொழிலாளர் சங்கத்திடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "பணி நீக்கம் குறித்து முடிவு ஆலோசிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படவுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், விமான போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகில் 31 லட்சம் பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details