தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / budget-2019

’ரியா சக்ரபர்த்தியுடன் சுஷாந்த் நடிப்பதாக இருந்தது’ - இயக்குநர் ரூமி ஜாஃப்ரி - சுஷாந்த் சிங்

மும்பை: தான் இயக்கவிருந்த புதிய படத்தில் சுஷாந்த் சிங் உடன் ரியா சக்ரபர்த்தி ஜோடியாக நடிக்கவிருந்ததாக இயக்குநர் ரூமி ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.

Sushanth
Sushanth

By

Published : Jun 16, 2020, 3:42 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இழப்பு திரைத்துறையினர் மத்தியில் மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரூமி ஜாஃப்ரி (Rumy Jaffery) இயக்கும் திரைப்படத்தில் நடிக்க சுஷாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதில், சுஷாந்திற்கு ஜோடியாக ரியா சக்ரபர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ரியா சக்ரபர்த்தியை தான் சுஷாந்த் காதலித்து வந்ததாகவும், அதன் பிறகு இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு, ரூமி ஜாஃப்ரி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

சுஷாந்திற்கு நடனமாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய திரைப்படமும் நடனத்தை பற்றிய படமே. அதனால்தான் சுஷாந்த்தை இப்படத்திற்காக தேர்வுசெய்தேன். அவரை நினைவில் வைத்துதான் இப்படத்தை எழுதினேன். லாக்டவுன் நேரத்தில்கூட அவர், படத்தின் ஸ்கிரிப்ட் படித்து தன்னை தயார் செய்துகொண்டிருந்தார்.

அவருக்கு திரைத்துறையில் நிறைய நண்பர்கள் கிடையாது. கடைசியாக அவர் என்னிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறினார்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:50 ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்பே உயிரைவிட்ட சுஷாந்த் சிங்!

ABOUT THE AUTHOR

...view details