தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / budget-2019

வீடியோ அழைப்பு மூலம் விசாரணை செய்த எஸ்பி! - Video conference investigation

திருப்பத்தூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  பொதுமக்களின் குறை மனுக்களை காணொலி மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.

sp investigated the complaints by video call
sp investigated the complaints by video call

By

Published : Jul 7, 2020, 1:59 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமலிருக்க, பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறை மனுக்களை காணொலி மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.

முன்னதாக மாவட்ட காவல் துறை சார்பில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11மணிமுதல் 12 மணி வரை பொதுமக்கள் தங்களது குறைகள் சம்பந்தமான மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கலாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று(ஜூலை 6) 25-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்திருந்தன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்பி என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில், 46 இடங்களில் கரோனா பரிசோதனை- மாவட்ட ஆட்சியர் பொன்னையா

ABOUT THE AUTHOR

...view details