தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / budget-2019

உ.பியில் தொடரும் பாலியல் குற்றங்கள் : சந்தைக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

லக்னோ : சந்தைக்குச் சென்ற பெண்ணைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

police station.
Bhadohi police station

By

Published : Oct 5, 2020, 3:19 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், பாதோகி மாவட்டத்தில் உள்ள கியான்பூரில் நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், கடந்த சனிக்கிழமை (அக்.,03) சந்தைக்குச் சென்றுள்ளார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரைக் கடத்தி ஜமுனி போக்ரா என்ற பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.

அங்கு அப்பெண்ணை அந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன், இது குறித்து வெளியே சொன்னால் அவரது குழந்தைகளைக் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பாதிப்புக்குள்ளான பெண் அவருடைய கணவருடன் சென்று பாதோகி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை தனஞ்சய் சுக்லா, டிங்கு சுக்லா, விகாஸ் குமார், ராய்ப்பூர் கிராமத்தில் வசிக்கும் சோனு உபாத்யாய் ஆகிய நால்வரும் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details