கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதி கேரள மாநிலம் வாளையாறு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான யானைகள், காட்டு எருமைகள், சிறுத்தைகள் உள்ளன. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் குறைவாக உள்ள நிலையில், மலையடிவாரத்திலுள்ள தோட்டங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும்.
சிறுத்தை கடித்ததில் ஆடுகள் பலி - கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு - Goat dies on Leopard bite
கோவை: மதுக்கரை பகுதியில் சிறுத்தை கடித்ததில் ஆடுகள் பலியானதால், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நவக்கரை விநாயகர் கோவில் பகுதியில் மொய்தீன் என்பவர் வீட்டில் உள்ள ஆட்டு பட்டியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது. மேலும் மற்ற இரண்டு ஆடுகளையும் கடித்ததில், அந்த ஆடுகள் காயத்துடன் உயிர் தப்பியது, ஆடுகளின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள், வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை நின்றிருப்பதைக் கண்டு சத்தம் எழுப்பியதால் அங்கிருந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது.
இதனையடுத்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. காயம்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.மேலும், அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.