இந்திய மக்களின் பார்வை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது தான் இருக்கும் என்றே சொல்லலாம். ஒருபுறம் இந்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை சரிசெய்யும் வகையில் இருக்குமா? என்ற சந்தேகம் பொருளாதார நிபுணர்களிடையே நிலவிவருகிறது. மறுபுறம் பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டிருக்கும் என இன்னொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை, விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, சாமானியன் கையில் அதிக பணம் புழங்கவேண்டும் என்ற நோக்கில் தாக்கல் செய்யப்படவேண்டும்.
இது எவ்வாறு சாத்தியம் என்றால், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பணப்புழக்க நிலையை மேம்படுத்துதல், சாமானிய மக்களின் வருமான வரியை குறைப்பதன் மூலம் வீழ்ச்சியடைந்த இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும்.கடந்த ஆண்டு நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது, நிர்மலா சீதாராமன் கார்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். இதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்றும் ஏழை மக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி ஆகும். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை வெறும் 5.65 கோடி மட்டுமே. அதனால் வரி செலுத்துபவர்கள், மத்திய அரசிடம் இருந்து சில சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஐந்து லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளித்தது. ஆனால் வருமான வரி துறை அளித்த தகவல் படி 95 லட்சம் பேர் ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமான வரம்பில் உள்ளதாக தெரிவிக்கின்றது.
இவர்களால் ஆண்டுக்கு 45,000 கோடி ரூபாய் வரை அரசாங்கத்திற்கு வரி வருமானம் கிடைக்கிறது. எனவே இவர்களது வரியை குறைப்பதன் மூலம் அவர்களது கையில் அதிக பணப்புழக்கம் ஏற்படும்.
பணப்புழக்கம் அதிகரித்தால் அது நேரடியாக நுகர்வோரின் எண்ணைக்கையை அதிகரிக்கும். அரசாங்கம் நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.தற்போது உள்ள நிலவரப்படி ஐந்து முதல் பத்து லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவிகிதம் வரி செலுத்துகின்றனர். வரி செலுத்துவோருக்கு இது அதிகமாக தோன்றுவதால் இதனை 20 சதவிகிதமாக குறைத்து, 20 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த 30 சதவிகிதம் வரியை விதிக்க வேண்டும். இது வரி செலுத்துவோருக்கு அதிக உற்சாகத்தை ஏற்படும், மேலும் இதனால் நுகர்வுத்திறன் அதிகரிக்கும் .
மேலும் 2.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்துவோருக்கு 10 விழுக்காடு வரி விதிக்க வேண்டும். இதனால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் அதிகரிக்கும்.தற்போது, சுய ஆக்கிரமிப்பு சொத்துக்கான வீட்டுக் கடன் வட்டி 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019-20 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவு 80 இஇஏ சட்டப்படி 45 லட்சம் ரூபாய் வரை வீட்டு கடன் வாங்குவோருக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படும்.
ரியல் எஸ்டேட் விலை பல நகரங்களில் அதிகமாக உள்ளது. எனவே முதல் தடவை வீடு வாங்குவோரின் வரியில் சில சலுகைகள் அல்லது விலக்கு அளித்தால் அது ரியல் எஸ்டேட் துறைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும் மேலும் வாங்குவோருக்கு அது எளிதாகும்.இதேபோல், பிரிவு 80 சி இன் கீழ் வீட்டு சேமிப்புக்காக ஆண்டுக்கு, ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் வரையறுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் அரசாங்கம் வரம்பை அதிகரிக்க வேண்டும்.குழந்தைகளின் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மற்றும் வீட்டுக்கடன் போன்ற செலவுகள் தனித்தனி விலக்குகளை அனுமதிக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரசாங்க செலவினங்களை அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் உயருமா?மொத்தத்தில், தற்போது தாக்கல் ஆகும் பட்ஜெட்டில், தினசரி பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தி மலிவு விலைக்கு கொண்டு வரவேண்டும். நுகர்வு அதிகரிப்பதற்கும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரிபார்க்கவும் சில தயாரிப்புகளின் பொருள்கள் மற்றும் சேவை வரி சதவிகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.