மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின் மீண்டும் பிரதமரான மோடி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பெரும்பாலும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குறிப்புகள் ஏதுமின்றி அமைந்திருந்தது.
பட்ஜெட் 2019: இறக்குமதி ராணுவப் பொருட்களுக்கு வரி விலக்கு! - வரி விலக்கு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ராணுவ தளவாட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

budget
அப்போது நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ராணுவத்திற்கு எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் ராணுவத்தை நவீனப்படுத்த உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதுவே முதன்மையானது எனக் குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ராணுவ தளவாடப் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக தெரிவித்தார்.