திருப்பத்தூர் மாவட்டம், ஜலகாம்பாறை அடுத்த குணசேகரன் என்பவரின் மகன் அண்ணாமலை (17). இவர் மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகில் தங்களது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டுருந்தார்.
அப்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 5 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், அண்ணாமலை தங்களது நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லும் வழியில், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.