ஐக்கிய அமீரகத்தின் பெயரில் வெளிநாடுகளிலிருந்து கேரள மாநிலத்திற்கு ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரத்தில் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போரட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி அம்மாநில அமைச்சர் கே.டி. ஜலீலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் இளைஞர் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்ட கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர். ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதையடுத்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி கலைத்தனர்.
இந்தத் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் வெள்ளிக்கிழமை, அமலாக்கத்துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், தங்கக் கடத்தல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் கோழிக்கோட்டில் ரூ .1.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளதாக , அமலாக்கத்துறை இயக்குநரகம் ட்விட் செய்துள்ளது.
இதையும் படிங்க:தங்கக் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!