திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரவிச்சந்திரன்(25). இவருக்கும் இவரது உறவினர் மகள் பதினேழு வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி சிறுமியை ரவிச்சந்திரன் பாலியல் வன்புணர்வு செய்ததால் சிறுமி கருவுற்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள் கடந்த 15ஆம் தேதி முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இளைஞர் ரவிச்சந்திரன், அவரது பெற்றோர் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.