திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த ஜூலை 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக காவல் துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் - காவலர் பணியிடை நீக்கம் - Tirupattur district
திருப்பத்தூர்: ஊரடங்கு உத்தரவின்போது காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித் விவகாரத்தில், பணியில் இருந்த காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அப்போது ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது காவல் துறையினர் அவர் வந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்செயலால் பாதிப்படைந்த இளைஞர் காவலர்களை கண்டித்து தீக்குளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கு பணியில் இருந்த காவலர் சந்திரசேகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தற்போது அந்த இளைஞர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.