ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அர்விந்த்(20). இவர் சத்தியமங்கலத்தில் வெல்டிங் வேலை செய்துவந்தார். குடிப்பழக்கம் கொண்ட அர்விந்த சில நாள்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக கூறி சென்றவர் வீட்டுற்குத் திரும்பவில்லை. இதனையடுத்து அவரது பெறோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தநிலையில், மாரனூர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் - youngster body rescued in erode
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் வாய்க்காலில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
அர்விந்த் ஓட்டி வந்த பைக் மற்றும் அவரது காலணிகள் கரையில் இருந்து கைப்பற்றினர். விசாரணையில் குடிபோதையில் வாய்க்காலில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.