தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வாகனம் பறிமுதல் - இளைஞர் தற்கொலை முயற்சி - வாகனம் பறிமுதல்

கோயம்புத்தூர்: வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் செல்ஃபோன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

Suicide attempt
Suicide attempt

By

Published : Jul 2, 2020, 4:26 PM IST

கோவை தொட்டிப்பாளையம் ஆத்துகுட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றுள்ளார். கடன் தொகைக்கு முறையாக தவணை செலுத்தாததால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அப்பகுதியில் இருக்கும் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டி உள்ளார்.

இது குறித்து தகவலறிந்து வந்த பீளமேடு காவல் துறையினர் அவரை சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர். அதன்பின் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் வாகன கடன் செலுத்துவது இயலுமா என்று கேள்வி எழுப்பியதாகவும், இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் நிதி நிறுவனத்தினர் வாகனத்தை எடுத்துச் சென்றதால் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அவரை இதுபோன்ற முடிவுகள் எடுப்பது தவறு என்று காவல் துறையினர் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details