தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குடும்ப தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - திருமங்கலம் இளைஞர் தற்கொலை

மதுரை: திருமங்கலத்தில் குடும்பத் தகராறில் விரக்தியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
For family problem young man committed suicide

By

Published : Aug 2, 2020, 6:01 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அன்னகாமு. இவரது கணவர் செல்லப்பாண்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இவர் தனது இரு மகன்களுடன் வசித்துவந்துள்ளார்.

இதில், இளைய மகனான ஆனந்தபாண்டி (20), கார்பெண்டர் வேலை பார்த்துவந்தார். தற்போது கரோனா பாதிப்பினால் வேலையிழந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், துக்க நிகழ்விற்காக குடும்பத்தினர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து விரத்தியில் இருந்த ஆனந்தபாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை வெகுநேரமாகியும் ஆனந்தபாண்டி வீட்டை விட்டு வெளியே வராதத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வீட்டினுள் ஆனந்தபாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஆனந்தபாண்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ஆனந்தபாண்டியின் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details