தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மனைவி பிரிந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி பிரிந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

young-man-commits-suicide
young-man-commits-suicide

By

Published : Aug 8, 2020, 4:30 AM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தனம் (30).

இவர் சென்னையில் பணிபுரிந்த போது பிரியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா இவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த சந்தனம் தாணிப்பாறை அருகே தனியார் தோப்பில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details