கோயம்புத்தூர் மாவட்டம் வைசியால் வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிசந்திரபாபு(28). இவர் நேற்று துடியலூர் பகுதி வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்று வந்ததுள்ளார்.
கஞ்சா விற்ற இளைஞர் கைது! - கோவையில் கஞ்சா விற்ற நபர் கைது
கோயம்புத்தூர்: துடியலூர் அருகே கஞ்சா விற்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Cannabis sales bu young man
இது குறித்து தகவலறிந்த துடியலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசந்திரபாபுவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பின் அவரை துடியலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் இவர் பல நாள்களாக பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது கஞ்சா விற்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.