திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு, சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலையில் ஏராளமான காவலர்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர். இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்பட்டன.
மன அழுத்தம் குறையக் காவலர்களுக்கு யோகா பயிற்சி - காவல் அலுவலர்கள்
திருநெல்வேலி: காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக யோகா பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
Yoga practice for police officer
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, கரோனா நோய் தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.