தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி' - அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன்  யோகா பயிற்சிகள், இயற்கை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி- அமைச்சர் விஜயபாஸ்கர்
கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி- அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Jul 14, 2020, 3:54 PM IST

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவச் சிகிச்சையுடன் சித்தா சிகிச்சையும் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை விஜய பாஸ்கர், ”கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும்.

மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழிவகுக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு முழுவதும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள், உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா பயிற்சி, இயற்கை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு, சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details