தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

’பிளாக் ஷார்க்’ மொபைல் விளையாட்டு பிரியர்களுக்கு... திறன்மிகு அலைபேசி! - xiomi

சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் அலைபேசி நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமர் ரசிகர்களுக்காக சியோமி நிறுவனம் கடந்த ஆண்டில் பிளாக் ஷார்க் கேமிங் அலைபேசி மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சியோமி பிளாக் ஷார்க் 2 மாடலை இன்று அறிமுகம் செய்கிறது.

பிளாக் ஷார்க் 2

By

Published : Mar 20, 2019, 2:21 PM IST

சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் அலைபேசி, மெல்லிய பெசில், நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக் ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் கேமிங் அலைபேசி

நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கட்டமைப்புடன் கச்சிதமான ஒரு மேம்பட்ட கேமிங் அலைபேசியாகவே பிளாக் ஷார்க் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசியின் பின்பக்க வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் ஷார்க் 2

சினாப் டிராகன் 855 சிப்செட்

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் அலைபேசி, ஸ்னாப் டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய கேமிங் அலைபேசி வெறும் கேமிங்காக மட்டும் இல்லாமல் சிறந்த புகைப்படக்கருவி கொண்ட அலைபேசி ரகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 48 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க புகைபடக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2

திரவ குளிர்ச்சி தொழில்நுட்பம் 3.0

திரவ குளிர்ச்சி தொழில்நுட்பம் 3.0-யையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் அலைபேசியில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதேபோல் 27 வாட்ஸ் அதிவேக மின்னூக்கி (Charger) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

  • 6.39' முழு ஹெச்.டி. பிளஸ் அமோலேட் தொடுதிரை
  • அட்ரீனோ 640 ஜி.பி.யு.
  • குயல்காம் சினாப் டிராகன் 855 சிப்செட்
  • 6 ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் / 12 ஜிபி ரேம்
  • 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு (Internal Memory) / 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ரகங்கள்
  • 48 மெகா பிக்சல் புகைப்படக் கருவியுடன் கூடிய 12 மெகா பிக்சல் இரட்டை பின்பக்க புகைப்படக்கருவி
  • 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க சுயபடமெடுத்தல் (Selfie) புகைப்படக்கருவி
  • இன்பில்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (விரல் ரேகை உணர்வி)
  • ஹாண்ட்ஹெட் கிரிப்
  • கேம்பேட்
  • 27 வாட்ஸ் அதிவேக மின்னூக்கி
  • பிளாக் ஷார்க் 2

பிளாக் ஷார்க் 2 அலைபேசி விலை

சியோமி பிளாக் ஷார்க் 2 அலைபேசி இன் 6ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ரகம் வெறும் ரூ.33,000 விலையில் விற்பனைக்கு வருமென்றும், அதேபோல் சியோமி பிளாக் ஷார்க் 2 அலைபேசி இன் 12ஜிபி ரேம், 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ரகம் வெறும் ரூ.43,000 விலையில் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details