தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

போலி இ -பாஸ் வழங்கிய ஜெராக்ஸ் கடைக்குச் சீல் - coimbatore fake E-pass

கோவை: சூலூரில் போலியாக இ-பாஸ் வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் சீல்வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலி இ -பாஸ் வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு சீல்
போலி இ -பாஸ் வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு சீல்

By

Published : Jun 17, 2020, 12:04 PM IST

கோவை மாவட்டம் கண்ணம் பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் விருதுநகர் செல்வதற்காகச் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பித்து இ-பாஸ் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் விருதுநகரில் வாகன சோதனையின்போது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விருதுநகர் வருவாய் அலுவலர்கள் கோவை மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இயங்கிவந்த சூலூர் ஜெராக்ஸ் கடைக்கு வட்டாட்சியர் மீனாகுமாரி சீல்வைத்தார்.

மேலும் போலியாக இ-பாஸ் வழங்கிய கடை உரிமையாளர் பாலு மீது காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரைச் சூலூர் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details