ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே, மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேலஞ்ச் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஸ்மிதிரி மந்தானா தலைமையிலான டிரயல் பிளேசர்ஸ், மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
வெலாசிட்டி அணியின் பந்துவீச்சில் சிக்கிய டிரயல் பிளேசர்ஸ்! - மித்தாலி ராஜ்
வெலாசிட்டி அணிக்கு எதிரான இன்றைய மகளிர் டி20 கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டிரயல் பிளேசர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்தது.
இதில், டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த டிரயல் பிளசர்ஸ் அணி, வெலாசிட்டி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 43 ரன்களை எடுத்தார். கடந்தப் போட்டியில், 90 ரன்கள் அடித்து மிரட்டிய அந்த அணியின் கேப்டன் மந்தானா இப்போட்டியில், 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். வெலாசிட்டி அணி தரப்பில் ஏக்தா பிஷ்ட், அமெலியா கேர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.