கேல் கடோட் நடிப்பில் 2017ஆம் ஆன்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'வொன்டர் வுமன்'. பெண் சூப்பர் ஹீரோ வரிசையில் வெளியாகி ஹிட்டான முதல் திரைப்படம் இதுவாகும்.
அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 'வொன்டர் வுமன் 1984'! - Wonder woman movie
வொன்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அப்படத்தின் நாயகி கேல் கடோட் தெரிவித்துள்ளார்.
Wonder woman
இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகமான ’வொன்டர் வுமன் 1984’ பட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கரோனா வைரஸ் காரணமாக இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் நாயகி கேல் கடோட் தெரிவித்துள்ளார்.