திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்பனந்தல் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றும்படி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுபானக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் - திருவண்ணாமலை செங்கம்
திருவண்ணாமலை: குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், வெளியூர்களில் இருந்து வரும் மதுப் பிரியர்களால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், அரசு மதுபானக் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மலர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதி அளித்தார்.