திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவிக் குழு பெண்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் கடன் வழங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என வலியுறுத்தி உள்ளது.
தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தும் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பூர்: சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய பைனான்ஸ் நிறுவனம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்துவதாக சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தும் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து தவணைத் தொகை கேட்டு வருவதாகவும் தவணைத் தொகை கட்ட தவறியவர்களிடம் கூடுதல் அபராதம் விதிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.