திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ளது, நரசமங்கலம் என்ற கிராமம். அங்கு உள்ள கோயிலில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது.
திருவள்ளூரில் கோயில் அருகே பெண் குழந்தை மீட்பு - போலீசார் தீவிர விசாரணை! - Woman child Rescue near Tiruvallur
திருவள்ளூர்: கோயில் அருகே பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக, அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று பார்த்ததில் கூடையில் குழந்தை ஒன்று இருந்தது தெரியவந்தது. உடனடியாக, இது குறித்து காவல் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் மப்பேடு காவல் ஆய்வாளர் கண்ணைய்யா உள்ளிட்ட காவல் துறையினர், அங்கிருந்த பெண் குழந்தையை மீட்டு, உடல் நிலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் குழந்தை யாருடையது, எப்படி கோயிலுக்கு வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.