அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு செய்து தர தீர்மானம்! - mannargudi village Panchayat
திருவாரூர்: 2025ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு செய்து தரப்படும் என மன்னார்குடியில் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராமப்புர சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக விரைந்து முடிக்கப்படும், 2025ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் தொடக்க பள்ளிகளுக்கு புதிய கட்டடம், நியாயவிலை கடைகள் அமைத்து தரப்படும் என்பன உள்ளிட்ட சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.