தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

‘கோமாளி அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ - கம்பிர் பதிலடி - Gautham Gambhir

தன்னை கிண்டலாகப் பேசிய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியை, இந்தியாவில் இருக்கும் சிறந்த மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஃப்ரிடி ஒரு கோமாளி; உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன் - கம்பிர் பதிலடி

By

Published : May 4, 2019, 8:21 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியும் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே.

கிரிக்கெட்டில் தொடர்ந்து, பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களிலும் இவ்விரு வீரர்கள் ட்விட்டரில் அடித்துக்கொள்வார்கள். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஃப்ரிடி, தன் கிரிக்கெட் வாழ்வு குறித்து ‘கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தக்கத்தை எழுதினார்.

இதில், இந்திய வீரர் கவுதம் கம்பிர் குறித்து, "கம்பிருக்கு இருக்கும் ஒரே பிரச்னை அவரிடம் இருக்கும் திமிருதான், கிரிக்கெட்டில் எந்த ஒரு தனித்தன்மையான சாதனையையும் படைத்திடாத கம்பிருக்கு, திமிரு மட்டும்தான் அதிகம் உள்ளது" என சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பிரின் ட்விட்

இந்நிலையில், அஃப்ரிடியின் கருத்துக்கு கம்பிர் தற்போது ரியாக்ட் செய்துள்ளார். மருத்துவ வசதிக்காக ஏரளமான பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்தியா விசா வழங்கி வருகிறது. அந்த வகையில், அஃப்ரிடியை இந்தியாவில் இருக்கும் சிறந்த மனநல மருத்துவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன் என கம்பிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதலிடி கொடுத்துள்ளார். கம்பிரின் இந்த கிண்டலான ட்வீட் இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது பாஜகவில் இணைந்த கம்பிர், கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பளாராக போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லி உட்பட டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details